திருவள்ளூரை அடுத்த பூண்டி அருகே கொரியன் நாட்டு தொழில்நுட்பத்துடன் கார் உதிரி பாகம் தயார் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 350க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு நேர பணியில் 80 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுக்கத் தொடங்கினயுள்ளனர். சாப்பாடு பரிமாறப்பட்ட சாம்பாரை பார்த்தபோது அதில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு சாப்பிட்ட 42 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், நாங்கள் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கான உணவு இந்த கம்பெனி ஒப்பந்தம் செய்துள்ள வெளி நபரிடமிருந்து பெறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் அந்த உணவு சாப்பிட்டவர்கள் அனைவரும் வாந்தி எடுத்ததால் உணவை ஆய்வு செய்தபோது சாம்பாரில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு பிரச்னை இல்லை என்று கூறுகின்றனர். மேலும், எங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒரு தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுவரை இதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தெரிவிக்கின்றனர். கேட்டரிங் சப்ளை செய்து வரும் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த உழியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஜீ பூம் பா... என்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடாது' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி