திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் தடையை மீறி நான்கு பேர் பாலிகிட்ஸ் எனப்படும் மண் செம்புழுக்களை அடிக்கடி எடுத்து வந்துள்ளனர்.
இதனையறிந்த பழவேற்காடு கிராம மீனவர்கள் அமைப்பினர், செம்புழுக்களை எடுத்துவந்தவர்களை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தடையை மீறி செம்புழுக்களை கடத்த முயன்ற 4பேர் கைது முன்னதாக, பலமுறை இச்சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த எல்லையன், ஜமிலா பாத் கிராமத்தைச் சேர்ந்த மாலிக், ஜாபர், அசார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா கடத்தல்: இருவர் கைது!