திருவள்ளூர்:மோவூரில் 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதால் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் மற்றும் தமிழர் படையின் தலைவர் கி. வீரலட்சுமி ஆகியோர் நேற்று முன் தினம் (செப். 27) எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தீக்காயங்களுடன் சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் பென்னலூர்பேட்டை காவல் துறையினர் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ பதிவு செய்தது உறுதியானது.