திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 24) ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சிகள் என 378 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூரில் ஒரே நாளில் 378 பேருக்கு கரோனா - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவள்ளூர் : ஒரே நாளில் இன்று (ஜூலை 24) 378 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து 378 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் பூந்தமல்லி அரசு மருத்துமனைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று (ஜூலை 24) மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் 6 பேர். இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மின்னல் வேகத்தில் கரோனா தொற்று பரவி வருவதால் தனித்திரு, விழித்திரு, உடனுக்குடன் கை கழுவுங்கள், முகக் கவசம் அணியுங்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றுங்கள் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி வருகிறார். முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.