சென்னைக்கு அடுத்தப்படியாக, அதன் அருகாமை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகப்படியாக இருக்கிறது. இருப்பினும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அதன்படி இன்று (ஜூலை 18) திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 370 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்த்து 702ஆக உயர்ந்துள்ள. இதில், 5 ஆயிரத்து 282 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 266 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154ஆக உள்ளது.