தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 3,400 பேருக்கு டெங்கு பாதிப்பு - சுகாதாரத் துறை செயலர் - 3,400 dengue cases in Tamil Nadu

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரை மூன்றாயிரத்து 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

beela rajesh

By

Published : Oct 16, 2019, 6:48 PM IST

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு பூச்சியியல் துறை இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணமராஜு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோருடன் சென்று காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நபர்களை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், தமிழ்நாட்டில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 266 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகினர். தற்போது 23 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவருவகின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பீலா ராஜேஷ்

டெங்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ வார்டுகளும் மருந்துகளும் தயாராக உள்ளன. தனியார் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் மருந்தகங்களில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரின் மருத்துவச்சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக அவர் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை மூன்றாயிரத்து 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெங்கு பாதிப்பு 15 முதல் 20 விழுக்காடாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஐந்து விழுக்காடு மட்டுமே பாதிப்பு உள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details