சென்னை கோயம்பேடு சந்தையில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காத காரணத்தால் 200 கடைகளுடன் தற்காலிக சந்தை திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் அமைக்கப்பட்டது. அந்த சந்தை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் போதிய ஊழியர்கள் வராத காரணத்தால் 50 கடைகள் இயங்கவில்லை.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, பெங்களூரு, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தக்காளி, வெங்காயம், பீட்ரூட், உள்ளிட்ட காய்கறிகள் 400 கனரக வாகனங்களில் 3500 டன் காய்கறிகள் எடுத்து வரப்பட்டது. இதில் 3000 டன் காய்கறிகள் ரூபாய் 60 லட்சத்திற்கு விற்பனை ஆகி உள்ளதாக கோயம்பேடு மார்கெட் முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.