திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி தங்கக் கட்டிகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனடிப்படையில், இரண்டு வாகனங்களையும் பூந்தமல்லி வளர்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்ற பறக்கும் படையினர் தீவர விசாரணை மேற்கொண்டனர்.
பறக்கும் படை சோதனையில் 300 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது இதில், பறிமுதல் செய்யப்பட்ட 361 கிலோ எடை கொண்ட தங்கம் (சுமார் 300 கோடி ரூபாய்) சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவ்வாகனங்களில் வந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் கொண்டுவந்த ஆவணங்களைச் சரிபார்த்து பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.