திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாஜிபுரத்தில் ரகுநாதன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல நள்ளிரவு 2 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்தார்.
அப்போது கடையில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ நடந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது அவரது கடைக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்..