சோழபுரம் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஒருவர் சப்ளை செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறையினருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்! - தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை
திருவள்ளூர்: சோழவரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, தலைமறைவான வீட்டின் உரிமையாளரை தேடிவருகின்றனர்.
gutka seized by police
அப்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று டன் எடையுள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து தலைமறைவான வீட்டின் உரிமையாளரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா வழக்கில் அமைச்சரின் பெயர்?