திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கனமழை காரணமாக விநாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 3125 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதி 400 கனஅடியிலிருந்து 3000 கனஅடியாக நீர் திறப்பை பொதுப்பணித் துறையினர் அதிகரித்துள்ளனர்.
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 360 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 9 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பூண்டி ஏரியிலிருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வீணாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.