தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புழல் ஏரியில் குளித்த 3 மாணவர்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர்: புழல் ஏரியில் குளித்த 3 மாணவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புழல்
புழல்

By

Published : Dec 15, 2020, 6:57 AM IST

அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் (19), தமிழ்செல்வன் (17), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிலீப் (20) ஆகிய மூவரும் புழல் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, நேற்று (டிசம்பர் 14) காலை மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூவரும், நண்பர்கள் பிரகாஷ், ராஜு, சைமன், தாமரை, அபின் ஆகிய ஐந்து பேருடன் அம்பத்தூர் அருகே புத்தகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தய பயிற்சி பெற்றுள்ளனர்.

பின்னர், மதியம் 1 மணி அளவில் அம்பத்தூர் அருகே சூரப்பட்டு, மதுராமேட்டூர் பகுதியில் உள்ள புழல் ஏரி பகுதிக்கு எட்டு பேரும் வந்துள்ளனர். அங்கு ஏரியில் இறங்கி குளிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் மணிகண்டன், தமிழ்ச்செல்வன், பிலீப்குமார் ஆகிய மூன்று பேரும் மட்டும் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில், சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப் பார்த்த, நண்பர்கள் ஐந்து பேரும் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்துவந்த மாதவரம், புழல் தீயணைப்பு வீரர்கள், இளைஞர்களைத் தேடும் முயற்சியில் இறங்கினர்.

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மூவரையும் சடலமாக மீட்டெடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சடலங்கள் உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details