திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கடை ஒன்றின் விளம்பர பலகை அமைப்பதற்காக கருணாகரன், அருண் மற்றும் பாளையம் ஆகிய மூன்று பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர். விளம்பர பலகை கீழிருந்து மேலே தூக்கியபோது உயரழுத்த மின்சார கம்பி மீது உரசியதால் மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட மூவர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - 3 தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது
திருவள்ளூர்: கடைக்கு விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மூன்று தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட மூவர் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 3 தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து: ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:47:28:1600341448-tn-trl-04-eb-shok-vis-scr-7204867-17092020160957-1709f-1600339197-781.jpg)
இதில், கருணாகரன் மற்றும் அருண் ஆகியோருக்கு அதிகளவில் தீக்காயம் ஏற்பட்டு வலியால் துடித்தனர். உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த விபத்தில் கருணாகரன், அருண் மற்றும் பாளையம் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்சார கம்பி தாழ்வாக செல்வதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.