திருவள்ளூர்:சென்னையில் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுத்திடப் பெருநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூரில் ஆரணியிலிருந்து மாதவரம் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாதவரம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், ரகசியமாக அப்பகுதியைக் கண்காணித்து வந்தனர்.