திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்டோபர் 28) இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில், ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் நாள்தோறும் அணிவகுத்து நிற்கின்றன.
திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் - Tirupati National Highway
திருவள்ளூர்: திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதில், இருபுறங்களிலும் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
traffic jam
இந்நிலையில், பட்டரைபெருமந்தூர் முதல் நாராயணபுரம் வரை இருபுறங்களிலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்தை சீர் செய்ய போதிய காவலர்கள் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நிரந்தர தீர்வாக மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.