திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியிலும் வாகன தனிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் நேற்று(செப்.19) இரவு ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 5.1/2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றம் வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த அஸ்கோர்ஸ்(48) மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சங்கர் கபாலி(18) ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.