திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தபடுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள டீக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருவேற்காடு அடுத்த சுந்தரசோழவரம் பகுதியில் வசிக்கும் ராஜகோபால் என்பவரது வீட்டில் கலப்பட டீத்தூள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள் ராஜகோபால் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.