தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயில் குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு - குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் பங்குனி உத்திரம் விழாவிற்கு வந்த 2 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

By

Published : Mar 28, 2021, 8:19 PM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் விழா இன்று (மார்ச் 28) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு வந்த 2 இளைஞர்கள் கோயிலின் அருகே உள்ள குளத்தில் குளித்தனர். இந்தக் குளம் சரியாகப் பராமரிக்கப்படாததால் சகதி அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

இதனால் இளைஞர்கள் சகதியில் சிக்கினர். உடனே, அவர்களது உறவினர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனிடையே குளத்தில் மூழ்கி இளைஞர்கள் உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இளைஞர்களின் சடலங்களை மீட்டனர். தொடர்ந்து சடலங்களை உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நெகேமியா (18), கிஷோர் குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்பப் பிரச்சினையால் வீட்டைவிட்டு வெளியேறிய கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details