தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பறிமுதல் - Vehicle Testing in Thiruvallur Destruction

திருவள்ளூர்: அழிஞ்சிவாக்கத்தில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்

By

Published : Nov 16, 2019, 4:47 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சோழவரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான இரண்டு சரக்கு வாகனங்களை அவர்கள் சோதனையிட்டனர்.

அதில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்டவை பண்டல் பண்டலாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒரு வாகனத்தை சோதனையிட்டு கொண்டிருந்தபோது இன்னொரு வாகனத்திலிருந்த இருவர் தப்பியோடினர்.

திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பொருள்கள் பறிமுதல்

இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்காவையும் இரண்டு சரக்கு வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details