திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் - திருவள்ளுர் கூட்டுச்சாலையில் தனிநபருக்குச் சொந்தமான துணிக்கடை உள்ளது.
இந்தக் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளைத் தேர்வுசெய்து எடுத்துக்கொண்டு, "கடையின் உரிமையாளர் ராஜேஷ் எனக்குத் தெரிந்தவர். அவருக்குப் போன் செய்யுங்கள்" எனக்கூறி ஊழியர்களிடம் போக்கு காட்டிவிட்டு துணிகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.