திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் சுரேஷ்(32), ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அம்பத்தூரில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க நகைகள், வெளள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.