தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற  சிறுவர்கள் உயிரிழப்பு! - THIRUVALLUR

கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விநாயகர் சிலையை கரைக்க 2 சிறுவர்கள் பலி
விநாயகர் சிலையை கரைக்க 2 சிறுவர்கள் பலி

By

Published : Sep 12, 2021, 7:43 AM IST

திருவள்ளூர்: சிறுகடல் ஆர்கே கார்டன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகன் சாமு விக்னேஷ் (13), கொட்டும் பேடு பி.கே நகர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமனின் மகன் மோனிஷ் (11).

இவர்கள் இருவரும் இணைந்து தங்கள் வீட்டு அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்க நேற்று முன்தினம் (செப். 10) சென்றுள்ளனர்.

அப்போது, இருவரும் தவறி கால்வாயில் விழுந்துள்ளார்கள். தொடர்ந்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிகமாக இருந்த நீரின் வேகம்

இதனால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் இறங்கினர்.

தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் இருவருடைய உடலும் இரவு சுமார் 11 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து உடனடியாக, உடலை மீட்டு திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் இரண்டு பேர் கால்வாயில் மூழ்கி இறந்த சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: நோய் தொற்று காலம் இது - பண்டிகை நாட்களில் உங்கள் கைவசம் இருக்கவேண்டியவை என்ன?

ABOUT THE AUTHOR

...view details