திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மணவூர் பகுதி சேர்ந்த கருணாகரன் மகன் நிரஞ்சன் (17) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கோகுல் (15) இருவரும் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் நீரில் மூழ்கியுள்ளனர். ஆற்றங்கரையில் கிடந்த சிறுவர்களின் உடைகளை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.