தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி சேர காத்திருந்த பெண் பாம்பு கடித்ததில் பலியான சோகம்! - tamil news

திருவள்ளூர் அருகே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரி சேர காத்திருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி சேர்க்கைக்காக காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!..
கல்லூரி சேர்க்கைக்காக காத்திருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!..

By

Published : May 15, 2023, 10:15 AM IST

திருவள்ளூர்:பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பிரதாப் என்பவரது மகள் அக்க்ஷயா (வயது 17) ஆவார். இவர் அண்மையில் தனியார் பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிச் சேர்க்கைக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில், இன்று பிற்பகல் அக்க்ஷயா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது காலில் பாம்பு ஒன்று கடித்துள்ளது.

அக்க்ஷயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், உடனடியாக அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அக்க்ஷயாவிற்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க:வால்பாறையில் வரையாடுகளுக்கு தொந்தரவு - வனத்துறையினரின் நடவடிக்கை தேவை

இதனையடுத்து, மாணவி அக்க்ஷயா சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக பிணவறையில் மாணவி சடலத்தைப் பத்திரப்படுத்தக் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து உள்ளதால், தனியாரிடம் தான் வாங்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அடுத்த மாதம் கல்லூரியில் சேர காத்திருந்த பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தனியார் தங்கும் விடுதியில் தாய், மகள் தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details