தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 கிலோ கஞ்சா பறிமுதல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் கைது - தமிழ்நாடு-ஆந்திர எல்லை

திருவள்ளூர்: தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

16 கிலோ கஞ்சா பறிமுதல்: திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் கைது
16 கிலோ கஞ்சா பறிமுதல்: திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் கைது

By

Published : Apr 15, 2021, 6:45 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த அரசுப் பேருந்தை சோதனை செய்தபோது பேருந்தில் வாசனை திரவியங்கள் பூசிய பையிலிருந்த 16 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர்.

பின்னர் பேருந்தில் சந்தேகத்தின் அடிப்படையில் திண்டுக்கல் சந்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்து (42) என்பவரைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க குழு அமைக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details