வரும் ஏப்ரல் 18 அன்று தமிழகம் புதுச்சேரி உள்பட 40 நாடாளமன்ற தொகுதிகளிலும் தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இந்தமாதம் 19 முதல் 26 வரை நடைபெற்றது. இந்நிலையில் பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
பூந்தமல்லி இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்கள் போட்டி - Poonamallee bypolls
திருவள்ளூர்: பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 17 நபர்களில் 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டதாக தேர்தல் அதிகாரி ரத்னா தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி இடைத்தேர்தல்
பின்னர் நிருபர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி, வேட்புமனு தாக்கல் செய்த 17 நபர்களில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவும் மாற்று வேட்பாளராக போட்டியிட்ட இருவரின் வேடப்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.