திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆயிரத்து 381 கிலோ தங்கம் சென்னையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தம் 20 நாட்களுக்கு முன்பு முடிவுக்கு வந்ததையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் தங்க நகைகள் சாலை மார்க்கமாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான போர்டு கருவூலத்திற்கு 5 லாரிகளில் எடுத்து வந்துள்ளனர். அந்த நேரத்தில் தீவிர சோதணையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தங்கம் எடுத்துவந்த லாரியை மடக்கி விசாரணை செய்தனர்.
1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது - thirupathi
திருவள்ளூர்: ஆவடி அருகே பிடிபட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்பது உறுதியாகியுள்ளது.
gold
இந்நிலையில் தங்க நகைகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளும் பஞ்சாப் நேஷனல் பேங்க் அதிகாரிகளும் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணத்தை கொடுத்து விளக்கம் அளித்தனர். வருமானவரித் துறை அதிகாரிகளும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆவணங்கள்படி நகைகள் தேவஸ்தானத்திற்கு சொந்தமானதுதான் என உறுதி செய்து தங்கத்தை திருப்பி அளிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.