திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரிக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்! - Trivallur
திருவள்ளூர்: பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சொகுசு காரில் கடத்திச் செல்லப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
![புதுச்சேரிக்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சா பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3897863-191-3897863-1563630148993.jpg)
அப்போது ஆந்திராவிலிருந்து வேகமாக வந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சா இருந்ததை அறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, காரில் வந்த இருவரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர்கள் புதுச்சேரியில் உள்ள பெண் கஞ்சா வியாபாரி மேகலாவாணிக்கு 16 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் சொகுசுக் காருடன் பறிமுதல் செய்து பிடிபட்ட கடத்தல்காரர்கள் இருவரையும் திருவள்ளுவர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.