திருவள்ளூர் மாவட்டம் மருத வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், ராதா தம்பதியருக்கு 11 மாதத்தில் நிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் நிஷாந்த்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.