திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பி.பலராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் காமராஜர் துறைமுக கழகம் சார்பில் சுமார் 28 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரப்பட்ட குளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
அத்திப்பட்டு ஊராட்சியில் ஜூவாரி சிமெண்ட் நிறுவனம் சார்பிலும், என்டிசிஎஸ் நிறுவனம் சார்பிலும் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகளை திறந்து வைத்த பலராமன், தமிழ்நாடு அரசு வழங்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பினையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அத்திப்பட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்! பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் பி.பலராமனிடம், அத்திப்பட்டு ஊராட்சியின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் மனு அளித்தார்.
இதையும் படிங்க:கூத்தப்பாடி பஞ்சாயத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்