திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி ஊராட்சியில் நீண்ட நாள்களாக லோ வோல்டேஜ் எனப்படும் குறைந்த மின்னழுத்த காரணமாக கிராம மக்கள் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வந்தது. எனவே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ - New transformer was start in thiruvallur
திருவள்ளூர்: செஞ்சி ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கனவான குறைந்த மின் அழுத்தத்தைப் போக்கும் வகையில் 100 கெல்வின் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
100 Kelvin transformer
இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜு 110 கேவி திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வழிவகை செய்தார். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் புதிய டிரான்ஸ்பார்மரின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.