திருவள்ளூர்: மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை சேர்ந்த நாகராஜ், நவநீதம் தம்பதியர் மகன் ரா.நா.ரவிகிருஷ்ணா(10)அங்குள்ள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகா பயின்று வருகிறார்.
இவர், இரு கால்களுக்கு இடையே உடலை முன் நோக்கி வளைத்து, பின்புறமாக தலையை மேல் நோக்கி பார்க்கும், பாத குண்டலாசனம் என்னும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 32 முறை செய்து உலக சாதனை படைத்தார்.