திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் கற்குழாய் சாலையைச் சேர்ந்தவர் சேகர், இவரது மனைவி வசந்தி. இந்த தம்பதியின் மகன் மோகனரங்கம் (10). சிறுவன் மோகனரங்கம் வீட்டின் அருகே உள்ளே விளையாட்டு மைதானம் அருகே நண்பர்களுடன் விளையாட சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு வந்து சேராததால், பதற்றம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
திருவள்ளூரில் மின்கம்பியை மிதித்த சிறுவன் பலி
திருவள்ளூர்: விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது மைதானம் அருகே அறுந்து விழுந்து கிடந்திருந்த மின்கம்பியை பிடித்தவாறு சிறுவன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர், சிறுவனின் உடலை உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழப்பால் அப்பகுதியினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:அறுந்து கிடந்த மின் கம்பியை வெறுங்கையால் தொட்ட மூதாட்டி பரிதாப பலி!
TAGGED:
சிறுவன் மின்சாரம் தாக்கி பலி