திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டகரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், அவரது மனைவி சர்மிளா இருவரும் அருகில் உள்ள குருவி மேடு என்ற பகுதிக்கு விழாவிற்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
பின்னர் லாரியிலிருந்து இறங்கிய 8க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் சரமாரியாக வெட்டினர். அப்போது அவரது மனைவியும் அவரும் கெஞ்சியும் விடாமல், தடுக்க முயன்ற மேலும் ஒருவரையும் வெட்டினர். இதனால் படுகாயமடைந்த மனோகரனை ஆகாஷ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அவரது உடலை மீஞ்சூர் காவல்துறையினர் அனுப்பி வைத்து, கொலை சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.