தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.10 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்! - செம்மரக்கட்டைகள்

திருவள்ளூர்: செங்குன்றத்தில் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

By

Published : Jun 30, 2019, 11:03 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து செங்குன்றம் வடகரை சந்திப்பில் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் காவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி மற்றும் காரை நிறுத்தும்படி காவலர்கள் சைகை காட்டினர். ஆனால், நிற்காமல் சென்ற லாரியும், காரும் வேகமாக சென்றது.

இரண்டு வாகனங்களையும் காவலர்கள் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். லாரியில் சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்புடைய செம்மர கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. கடத்தியவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் மஞ்சம் பாக்கத்தில் உள்ள அரசு கண்டைனர் யார்டில் இருந்த கன்டெய்னரை உடைத்து அதிலிருந்து செம்மரக்கட்டைகளை திருடி லாரியில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

10 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராஜ், சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோரை செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்து சீதஞ்செரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், லாரி, கார் மற்றும் பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details