திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பூவலம்பேடு கிராமத்தில் சரக்கு வாகனம் ஒன்றில் அதிகளவில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கவரப்பேட்டை காவல் துறைக்குத் தகவல் கிடைத்து. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வாகனத்தை சோதனையிட்டனர்.
ஆந்திராவிற்கு கடத்த பதுக்கிவைக்கப்பட்ட 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - திருவள்ளூரில் ரேஷன் அரிசி கடத்தல்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவிற்கு கடத்துவதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
1.5 tonnes of ration rice seized
அந்தச் சோதனையில் 1.5 டன் ரேஷன் அரசி பறிமுதல்செய்யப்பட்டது. அத்துடன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டது. இதுதொடர்பாக ராமு, பிரகாஷ் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அரிசி ஆந்திராவுக்கு கடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:நத்தம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது