நெல்லை:நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியப்பன் (27) என்பவர், இன்று(ஜன.25) பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர், குறிச்சிகுளம் பகுதியில் திருநெல்வேலி-மதுரை புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்த மர்ம நபர்கள் வெள்ளியப்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தாழையூத்து போலீசார், வெள்ளியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.