தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாளையங்கோட்டையில் முகம் சிதைந்த நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுப்பு! - குற்றம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில், முகம் சிதைந்த நிலையில் இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி செய்திகள்  thirunelveli news  thirunelveli latest news  murder case  murder news  thirunelveli youth murder issue  thirunelveli palayamkottai youth murder issue  திருநெல்வேலியில் இளைஞர் கொலை  கொலை  கொலை வழக்கு  குற்றம்  இளைஞர் கொலை
இளைஞரின் உடல் கண்டெடுப்பு

By

Published : Aug 8, 2021, 5:34 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

தொடர்ந்து திருநெல்வேலி மாநகர ஆணையர் செந்தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் இளைஞரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழி வாங்கல் நடவடிக்கையா?

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மோப்ப நாய் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மனக்காவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த டேவிட் என்பதும், அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்த்தும் தெரியவந்தது.

இவர் டேவிட் ஆனந்த்ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் ஆவார். எனவே ஆனந்த்ராஜ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக டேவிட் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரியுடன் நெல் மூட்டைகளை கடத்த முயற்சி... சிசி டிவி காட்சி மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள்!

ABOUT THE AUTHOR

...view details