திருநெல்வேலி மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(18). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் கோயில் அணையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி அணையில் விழுந்தார்.
செல்ஃபி மோகம் - அணையில் தவறி விழுந்து இளைஞர் பலி - Youth dead
திருநெல்வேலி: அடவிநயினார் அணையிலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![செல்ஃபி மோகம் - அணையில் தவறி விழுந்து இளைஞர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4417538-thumbnail-3x2-selfie.jpg)
ஜாகிர் உசேன்
செல்பி எடுக்க முயன்று அணையில் தவறி விழுந்து இளைஞர் பலி..
அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.