திருநெல்வேலி:செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவைச்சேர்ந்தவர், தினேஷ் குமார் (26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்துத்தேர்வில் தேர்வு எழுதியுள்ளார். மேலும் இவர் பக்கத்து தெருவைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு காதலித்த பெண்ணுக்கும் தினேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், காவலர் தேர்வு சரியாக எழுதாததால் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் மனம் உடைந்த தினேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த செய்தியைக் கேட்டு துக்கத்தில் கதறி அழுத, அவரது சித்தப்பா மகன் வெங்கடேஷ், நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அண்ணன் இறந்த துக்கத்தில் கதறி அழுத தம்பி நெஞ்சு வலியால் இறந்த சம்பவம், செட்டிகுளம் பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ்குமார் தற்கொலை மற்றும் அவரது தம்பி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து விபத்து - 4 பேர் பலி