தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான நபருடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்: அறிவுரை வழங்கிய காவல் துறை - திருமணமான நபருடன் இளம்பெண் ஓட்டம்

திருநெல்வேலி: திருமணமான நபருடன் ஓடி வந்த இளம் பெண்ணிற்கு காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் மீட்பு
இளம்பெண் மீட்பு

By

Published : Oct 23, 2020, 12:13 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த குலசேகரநல்லூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் ராமலட்சுமி(18). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு போனவர் திரும்ப வராததால் வெள்ளைச்சாமி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் மகள் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் ராமலட்சுமி தனது காதலனுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கங்கைகொண்டன் காவல் துறையினர் நேரில் சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி(31) என்பதும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும் தெரியவந்தது. இந்த விஷயம் தெரிந்தே ராமலட்சுமி அவர் மீது உள்ள காதலால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையடுத்து கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர் சோபா ஜோன்சி, இருவருக்கும் அறிவுரை வழங்கி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது ஜோன்சியிடம் கேட்டபோது, ராமலட்சுமிக்கு 18 வயது நிறைவடைந்துள்ளதால் அவர் மேஜர் ஆவார். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக காணாமல் போன வழக்கு இருப்பதால் இருவருக்கும் அறிவுரை வழங்கி அங்கே அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ராமலட்சுமிக்கு காவல் துறையினர் கவுன்சிலிங் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details