தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து அறுவை சிகிச்சை: மருத்துவர் மீது கணவர் புகார்! - திருநெல்வேலியில் பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து அறுவை சிகிச்சை

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மருத்துவர்கள் மீது புகார் அளித்த கணவர்
மருத்துவர்கள் மீது புகார் அளித்த கணவர்

By

Published : Mar 21, 2020, 12:08 AM IST

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காளியம்மாள். இவருக்கு, முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது பிரசவம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் காளியம்மாளுக்கு கடும் வயிற்று வலி இருந்துள்ளது. இது குறித்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் கேட்டபோது சரியான பதில் ஏதும் கூறவில்லை எனத் தெரிகிறது.

இதனையடுத்து நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் பஞ்சு இருப்பது தெரியவந்தது. உடனே அறுவை சிகிச்சை மூலம் பஞ்சு அகற்றப்பட்டது. இதனைக்கண்ட அவரது கணவர் முருகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மருத்துவர்கள் மீது புகார் அளித்த கணவர்

பின்னர், தனது மனைவி வயிற்றில் பஞ்சை வைத்து தவறான சிகிச்சை மேற்கொண்ட அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கறிக்கோழி குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப் புகார்

ABOUT THE AUTHOR

...view details