தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண் சரிவு - உயிருக்குப் போராடிய தொழிலாளி பத்திரமாக மீட்பு - tirunelveli worker trapped

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டபோது மண் சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மண் சரிவு
landslide

By

Published : Aug 8, 2021, 9:43 PM IST

திருநெல்வேலி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த பேருந்து நிலையக் கட்டிடங்களை நவீனப்படுத்துதல், நுழைவு வாயில் முன்பு பூங்காக்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.இந்தப் பணியில் நெல்லை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் ஆவுடையம்மாள்புரம் காலணியை சேர்ந்த ரமேஷ், சுமார் 5 அடி ஆழத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த சக ஊழியர்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர் .

மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர்,தொழிலாளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர், தொழிலாளி ரமேஷ் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:மல்லிகை பூ மாஸ்க் - இது மதுரை ஸ்டைல்

ABOUT THE AUTHOR

...view details