நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவரை ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். அந்த சமயத்தில் சிவ பிரேம்குமார் தங்க ராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை பெற்றுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே சிவ பிரேம்குமாரிடம் கொடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவ பிரேம்குமார் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.