திருநெல்வேலி:தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் களக்காடு சிதம்பரபுரம் ஊருக்கு நடுவே செல்லும் நாங்குநேரி யான் கால்வாயில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.