தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு: பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - Woman killed in truck crash

நெல்லை: விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விபத்து
விபத்து

By

Published : Nov 8, 2020, 12:03 AM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(57). கோயில் பூசாரியான இவர், இன்று தனது மனைவி சாந்தியுடன் (54) இருசக்கர வாகனத்தில் நெல்லை டவுனுக்கு சென்று கொண்டிருந்தனர். நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரசி லோடு ஏற்ற சென்ற லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது உரசியது.

இதில் கணவன் மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது சாந்தி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பதறவைக்கும் அளவுக்கு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், பாலசுப்பரமணியன் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே தனது வாகனத்தை இடது புறமாக திருப்புகிறார. அப்போது அங்கு வந்த லாரியின் முன்பகுதி பாலசுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தில் உரசியபோது இருவரும் தடுமாறி விழுகின்றனர்.

பாலசுப்ரமணியன் லேசான காயங்களுடன் உடனே எழுந்து நிற்கிறார். ஆனால் அவரது மனைவி பின்புறமாக விழுந்ததால் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details