திருநெல்வேலி மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவைக் கொண்டது. இந்த அணையில் இன்று அதிக அளவிலான உபரிநீர் வெளியேறுவதால் அணையின் கதவு திறக்கப்பட்டது.
மண்சரிவால் வயல்வெளிகளில் புகுந்த அணை நீர்! - திருநெல்வேலி மேற்கு மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணை
திருநெல்வேலி: மேக்கரை அடவிநயினார் அணை கதவு திறக்கையில், எதிர்பாராவிதமாக கதவு உடைந்து அதிக நீர் வெளியேறியதில் மண்சரிவு ஏற்பட்டு வயல்வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
அடவிநயினார் அணை
அப்போது அதிக நீர் வெளியேறியதால் எதிர்பாராவிதமாக வடகரை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அதிகளவு நீர் வெளியேறி வயல்வெளிகள் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அலுவலர்கள் அணையிலிருந்து வெளியேறி வரும் நீரை அடைக்க முயற்சி செய்துவருகின்றனர்.