திருநெல்வேலி: தமிழகத்தின் தெற்கே உருவாகிய கீழடுக்கு சுழற்றியால் தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால், அம்மாவட்டங்களில் உள்ள ஆறுகள், அணைகள், குளம் போன்ற நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், அம்மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் நீரோட்டம் தொடர்ந்து அதிகரித்து, ஆபாத்தான நிலையைக் கடந்து செல்கிறது. இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணையம், அதி கனமழை பெய்யும் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீரோட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதை, வரைபடம் மூலம் விளக்கி பதிவிட்டுள்ளது.
தாமிரபணி: தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாடு பகுதியில் தாமிரபரணில் வெள்ளநீர் வரத்து 21.35மீ அளவில் இருந்த நிலையில், தற்போது 2.02 மீ அளவில் உயர்ந்து, அபாய நிலையையும் தாண்டி 23.375 மீ-ஆக நீர் வரத்து அதிகரித்து, வெள்ளமாக கரைபுரண்டு செல்கிறது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை பகுதியில், தாமிரபரணி ஆற்றின் நீரோட்டம் அதன் ஆபத்தான நிலையான 5.4 மீ அளவில் இருந்த நிலையில், தற்போது, 1.90 மீ அளவில் உயர்ந்து, அபாய நிலையை விட 3.5 மீ உயர்ந்து வெள்ளமாக கரைபுரண்டு பாய்ந்து வருகிறது.
மேலும், நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில், 77.43 மீ அளவில் அதன் ஆபத்தான நிலையைக் கடந்து வெள்ளமாக கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின் நீரோட்டம், 3.03 மீ அளவிற்குத் தொடர்ந்து உயர்ந்து பெரு வெள்ளமாக மாறும் நிலைக்குச் செல்கிறது.