வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அதேசமயம் மலைப்பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை.
இதனால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 60 முதல் 65 சதவீதம் தான் நீர்மட்டம் உள்ளது. தற்போது பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் சற்று கூடுதல் தண்ணீர் சென்றது.