திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி வாய்ந்த எண்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 3 ஆயிரத்து 403 பேர் உள்ளனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு இன்று (மார்ச் 30) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்! - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்
திருநெல்வேலி : எண்பது வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு இன்று (மார்ச் 30) முதல் மூன்று நாள்கள் வாக்குப்பதிவு நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
![முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்! மருத்துவப் பொருட்களை ஆய்வு செய்த ஆட்சியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11207947-thumbnail-3x2-votecollection1.jpg)
மருத்துவப் பொருட்களை ஆய்வு செய்த ஆட்சியர்
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வாக்கு பதிவு தொடக்கம்
இதற்காக 109 நடமாடும் வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் உள்ள ஆயிரத்து 924 வாக்குச் சாவடிகளுக்கும் உடல் வெப்ப சோதனைக் கருவி, முகக்கவசம், கிருமிநாசினி உள்பட்ட மருத்துவப் பொருள்களை அனுப்பி வைக்கும் பணிகளும் தொடங்கியது.
இதையும் படிங்க :குஷ்பு சிறந்த பேச்சாளர், திறமைசாலி என முதலமைச்சர் புகழாரம்!